அர்ஃபஜா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை செவியேற்றதாகக் கூறினார்கள்:
என் சமூகத்தில் பல (தீய) நிகழ்வுகளும், பல (குழப்பமான) காரியங்களும், பல (பித்னாக்களும்) ஏற்படும். முஸ்லிம்கள் ஒன்றுபட்டிருக்கும்போது, அவர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்த எவன் விரும்புகிறானோ, அவன் யாராக இருந்தாலும், அவனை வாளால் வெட்டுங்கள்.