وعن أنس رضي الله عنه أن فتى من أسلم قال: يا رسول الله إني أريد الغزو وليس معي ما أتجهز به؟ قال: ائت فلانا فإنه قد كان تجهز فمرض فأتاه فقال: إن رسول الله صلى الله عليه وسلم يقرئك السلام ويقول: أعطني الذي تجهزت به، فقال: يا فلانة أعطيه الذي تجهزت به، ولا تحبسي منه شيئاً ، فوالله لا تحبسين منه شيئاً فيبارك لك فيه. ((رواه مسلم)).
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், "அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் என்னைத் தயார்படுத்திக்கொள்ள என்னிடம் ஏதுமில்லை" என்று கூறினார். நபியவர்கள் (ஸல்), "இன்னாரிடம் செல்லுங்கள். அவர் (போருக்காகத்) தம்மைத் தயார்படுத்திக்கொண்டார்; ஆனால் நோய்வாய்ப்பட்டுவிட்டார்" என்று கூறினார்கள்.
எனவே, அந்த இளைஞர் அவரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள். மேலும், 'நீர் உமக்காகத் தயார்செய்த பொருட்களை எனக்குக் கொடுத்துவிடுமாறு' கூறுகிறார்கள்" என்றார்.
அதற்கு அந்த மனிதர் (தம் மனைவியிடம்), "இன்னாளே! நான் எனக்காகத் தயார்செய்த பொருட்களை இவருக்குக் கொடுத்துவிடு. அதிலிருந்து எதையும் நிறுத்திக்கொள்ளாதே. அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ அதிலிருந்து எதையும் நிறுத்திக்கொள்ளாவிட்டால், அதில் உனக்கு பரக்கத் (அருள்வளம்) வழங்கப்படும்" என்று கூறினார்.