இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2510சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي سَعِيدٍ، مَوْلَى الْمَهْرِيِّ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، ‏:‏ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ إِلَى بَنِي لِحْيَانَ وَقَالَ ‏:‏ ‏"‏ لِيَخْرُجْ مِنْ كُلِّ رَجُلَيْنِ رَجُلٌ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ لِلْقَاعِدِينَ ‏:‏ ‏"‏ أَيُّكُمْ خَلَفَ الْخَارِجَ فِي أَهْلِهِ وَمَالِهِ بِخَيْرٍ كَانَ لَهُ مِثْلُ نِصْفِ أَجْرِ الْخَارِجِ ‏"‏ ‏.‏
அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ லிஹ்யான் கோத்திரத்தாரை நோக்கி (ஒரு படையை) அனுப்பியபோது, 'ஒவ்வொரு இரண்டு ஆண்களில் ஒருவர் புறப்படட்டும்' என்று கூறினார்கள். பிறகு (வீட்டில்) தங்கியிருந்தவர்களிடம், 'உங்களில் எவர் புறப்பட்டுச் சென்றவருக்குப் பகரமாக அவருடைய குடும்பத்தையும் செல்வத்தையும் நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறாரோ, அவருக்குப் புறப்பட்டுச் சென்றவரின் கூலியில் பாதியளவு கிடைக்கும்' என்று கூறினார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)