ஜாபிர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
உங்களில் எவரேனும் ஒரு கவளம் (உணவை) கீழே தவறவிட்டால், அதை அவர் எடுத்து, அதில் படிந்துள்ள அசுத்தத்தை நீக்கிவிட்டு, பிறகு அதை உண்ண வேண்டும்; அதை ஷைத்தானுக்கு விட்டுவிடக் கூடாது. மேலும், தம் கைவிரல்களை சப்புவதற்கு முன்பு துண்டால் கையைத் துடைக்கக் கூடாது. ஏனெனில், உணவின் எந்தப் பகுதியில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
التاسع: عنه أن رسول الله صلى الله عليه وسلم، أمر بلعق الأصابع والصحفة وقال: "إنكم لا تدرون في أيها البركة" ((رواه مسلم)).
وفي رواية له: " إذا وقعت لقمة أحدكم . فليأخذها فليمط ماكان بها من أذى، وليأكلها، ولا يدعها للشيطان، ولا يمسح يده بالمنديل حتى يلعق أصابعه، فإنه لا يدري في أي طعامه البركة".
وفي رواية له: "إن الشيطان يحضر أحدكم عند كل شيء من شأنه حتى يحضره عند طعامه، فإذا سقطت من أحدكم اللقمة فليمط ما كان بها من أذى ، فليأكلها، ولا يدعها للشيطان".
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சாப்பிட்ட பிறகு) விரல்களைச் சூப்புமாறும், தட்டை வழித்துச் சாப்பிடுமாறும் கட்டளையிட்டார்கள். மேலும், "நிச்சயமாக (உணவின்) எதில் பரக்கத் இருக்கிறது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில்: "உங்களில் ஒருவரது உணவுக்கவளம் கீழே விழுந்துவிட்டால், அதை எடுத்து, அதில் படிந்துள்ள அசுத்தத்தை அகற்றி, பிறகு அதை உண்ணட்டும்; அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும், அவர் தம் விரல்களைச் சூப்பும் வரை கையைத் துண்டினால் துடைக்க வேண்டாம், ஏனெனில் உணவின் எந்தப் பகுதியில் பரக்கத் இருக்கிறது என்பதை அவர் அறியமாட்டார்".
வேறொரு அறிவிப்பில்: "நிச்சயமாக ஷைத்தான் உங்களில் ஒருவருடைய எல்லா விவகாரங்களிலும் அவருடன் ஆஜராகிறான்; அவர் உண்ணும்போதும் அவருடன் ஆஜராகிறான். எனவே, உங்களில் ஒருவரது கவளம் கீழே விழுந்துவிட்டால், அதில் உள்ள அசுத்தத்தை அகற்றிவிட்டு அதை உண்ணட்டும்; அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்".