அன்சாரிகளில் ஒருவரிடம் ஒரு விருந்தினர் இரவு தங்கினார். ஆனால், அவரிடம் அவரது உணவையும் அவரது குழந்தைகளின் உணவையும் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. எனவே, அவர் தன் மனைவியிடம், "குழந்தைகளைத் தூங்க வைத்துவிடு; விளக்கை அணைத்துவிடு; உன்னிடம் இருப்பதை விருந்தினருக்குக் கொடுத்துவிடு" என்று கூறினார்.
எனவே இந்த ஆயத் இறக்கப்பட்டது:
**(வ யுஃத்(O)தூன அலா அன்ஃபுஸிஹிம் வலவ் கான பிஹிம் கஸாஸா)**
“தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், அவர்கள் தங்களைவிட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கிறார்கள்.”