حَدَّثَنِي أَبُو عِمْرَانَ، مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ أَخْبَرَنَا إِبْرَاهِيمُ، - يَعْنِي ابْنَ سَعْدٍ
- عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ أَبْصَرَ فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا - قَالَ - فَصَنَعَ النَّاسُ الْخَوَاتِمَ مِنْ وَرِقٍ فَلَبِسُوهُ فَطَرَحَ
النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمَهُ فَطَرَحَ النَّاسُ خَوَاتِمَهُمْ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவித்தார்கள்:
நான் ஒரு நாள் (மட்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் ஒரு வெள்ளி மோதிரத்தைக் கண்டேன்; அதனால் மக்களும் வெள்ளி மோதிரங்களைச் செய்து கொண்டு அவற்றை அணிந்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது மோதிரத்தை எறிந்துவிட, மக்களும் தமது மோதிரங்களை எறிந்துவிட்டார்கள்.
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ، قِرَاءَةً عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، أَنَّهُ رَأَى فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا فَصَنَعُوهُ فَلَبِسُوهُ فَطَرَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَطَرَحَ النَّاسُ .
அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் ஒரு வெள்ளி மோதிரத்தைக் கண்டார்கள்; அதைத் தொடர்ந்து மக்களும் அது போன்ற மோதிரங்களைச் செய்து அணிந்து கொண்டனர். பிறகு, நபி (ஸல்) அவர்கள் தமது மோதிரத்தை எறிந்துவிட்டார்கள்; (மக்கள் அதை ஒரு சுன்னத்தாகக் கருதி மிகைப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அல்லது உலகாதாயப் பொருளாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காக) மக்களும் தங்களது மோதிரங்களை எறிந்துவிட்டனர்.