وعن عائشة رضي الله عنها قالت: واعد رسول الله صلى الله عليه وسلم جبريل عليه السلام في ساعة أن يأتيه، فجاءت تلك الساعة ولم يأته! قالت: وكان بيده عصًا، فطرحها من يده وهو يقول: "ما يخلف الله وعده ولا رسله" ثم التفت، فإذا جرو كلب تحت سريره. فقال: "متى دخل هذا الكلب؟" فقلت: والله ما دريت به، فأمر به فأخرج، فجاءه جبريل عليه السلام: فقال رسول الله صلى الله عليه وسلم : "وعدتني، فجلست لك ولم تأتني" فقال: منعني الكلب الذي كان في بيتك، إنا لا ندخل بيتًا فيه كلب ولا صورة" ((رواه مسلم)).
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக வாக்குறுதி அளித்தார்கள். அந்த நேரம் வந்தது; ஆனால் அவர்கள் வரவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் ஒரு தடி இருந்தது. அவர்கள் அதைத் தம் கையிலிருந்து எறிந்துவிட்டு, "அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதில்லை; அவனுடைய தூதர்களும் (மாறு செய்வதில்லை)" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் திரும்பிப் பார்த்தபோது, தங்கள் கட்டிலுக்குக் கீழே ஒரு நாய்க்குட்டி இருப்பதைக் கண்டார்கள். உடனே, "இந்த நாய் எப்போது உள்ளே நுழைந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குத் தெரியாது" என்று கூறினேன். பிறகு, அதை வெளியேற்றுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்; அது வெளியேற்றப்பட்டது. உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "நீங்கள் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தீர்கள். நான் உங்களுக்காகக் காத்திருந்தேன், ஆனால் நீங்கள் வரவில்லை" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "உனது வீட்டில் இருந்த நாய்தான் என்னைத் தடுத்துவிட்டது. நிச்சயமாக நாங்கள், நாயோ உருவப்படமோ உள்ள வீட்டிற்குள் நுழைய மாட்டோம்" என்று கூறினார்கள்.