وعنه أن النبي صلى الله عليه وسلم : مر عليه حمار قد وُسم في وجهه، فقال: لعن الله الذي وسمه ((رواه مسلم. وفي رواية لمسلم أيضًا: نهى رسول الله صلى الله عليه وسلم عن الضرب في الوجه، وعن الوسم في الوجه)).
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் முகத்தில் சூடு போடப்பட்ட ஒரு கழுதை கடந்து சென்றது. அப்போது அவர்கள், "அதற்கு (அதன் முகத்தில்) சூடு போட்டவனை அல்லாஹ் சபிக்கட்டும்" என்று கூறினார்கள்.
முஸ்லிம்.
முஸ்லிமில் உள்ள மற்றொரு அறிவிப்பு வருமாறு: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகத்தில் அடிப்பதையும், (மிருகத்தின்) முகத்தில் சூடு போடுவதையும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்."