இவர்கள் அனைவரும் ஷுஅபா (ரஹ்) அவர்கள் வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கின்றனர். வஹ்ப் பின் ஜரீர் (ரஹ்) அவர்களின் ஹதீஸில், '(ஆயத்துல் ஃபராயிள்) பாகப்பிரிவினைக்கான வசனம் அருளப்பெற்றது' என்றுள்ளது. நழ்ர் (ரஹ்) மற்றும் அல்கதீ (ரஹ்) ஆகியோரின் ஹதீஸில், '(ஆயத்துல் ஃபர்ள்) கடமையாக்கப்பட்ட வசனம் அருளப்பெற்றது' என்றுள்ளது. இவர்கள் எவருடைய அறிவிப்பிலும், 'ஷுஅபா (ரஹ்) அவர்கள் இப்னு முன்கதிர் (ரஹ்) அவர்களிடம் கூறியது' எனும் குறிப்பு இடம்பெறவில்லை.