وعن أبي طلحة زيد بن سهل رضي الله عنه قال: كنا قعودًا بالأفنية نتحدث فيها فجاء رسول الله صلى الله عليه وسلم فقالم علينا فقال: "ما لكم ولمجالس الصعدات؟ فقلنا: إنما قعدنا لغير ما بأس، قعدنا نتذاكر، ونتحدث. قال: "إما لا فأدوا حقها: غض البصر، ورد السلام، وحسن الكلام" ((رواه مسلم)). "الصُّعُدات" بضم الصاد والعين، أي: الطرقات.
அபூ தல்ஹா ஸைத் இப்னு ஸஹ்ல் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நாங்கள் எங்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள திண்ணைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களருகே வந்து நின்று, 'சாலைகளில் உள்ள அமருமிடங்களில் உங்களுக்கு என்ன வேலை?' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'நாங்கள் எந்தத் தீங்கும் செய்யும் நோக்கத்தில் அமரவில்லை; நாங்கள் (மார்க்க விஷயங்களை) நினைவூட்டிக் கொள்ளவும், பேசவும்தான் அமர்ந்தோம்' என்று கூறினோம். அதற்கு அவர்கள், '(அங்கு அமர்வதைத் தவிர) உங்களுக்கு வேறு வழியில்லையென்றால், அதற்குரிய உரிமையை நிறைவேற்றுங்கள்: (அவை) பார்வையைத் தாழ்த்துதல், ஸலாமுக்கு பதிலளித்தல் மற்றும் நல்ல முறையில் பேசுதல்' என்று கூறினார்கள்."