ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு ஒரு தாய்மாமன் இருந்தார். அவர் தேள் கடிக்கு ஓதிப்பார்த்து வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்ப்பதைத் தடை செய்தார்கள்.
ஆகவே அவர் (என் தாய்மாமன்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஓதிப்பார்ப்பதைத் தடை செய்துள்ளீர்கள். நானோ தேள் கடிக்கு ஓதிப்பார்ப்பவன்" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாரேனும் தம் சகோதரருக்குப் பயன் அளிக்க முடிந்தால், அவர் அதைச் செய்யட்டும்" என்று கூறினார்கள்.