இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2278ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஹிஜாமா செய்துகொண்டார்கள்; மேலும் ஹிஜாமா செய்தவருக்குக் கூலியைக் கொடுத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5691ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم احْتَجَمَ وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ وَاسْتَعَطَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுக்கப்பட்டு, தங்களுக்கு இரத்தம் குத்தி எடுத்தவருக்கு கூலியைக் கொடுத்து, பின்னர் ஸுஊத் (மூக்கினால் உறிஞ்சப்படும் மருந்து) எடுத்துக்கொண்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح