சிமாக் பின் ஹர்ப் அவர்கள் அறிவித்தார்கள்:
ஜாபிர் பின் ஸமுரா (ரழி) அவர்களிடமிருந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக மக்காவில் ஒரு பாறை உண்டு; அது நான் நபியாக அனுப்பப்பட்ட இரவில் எனக்கு ஸலாம் கூறிவந்தது, மேலும் அதை நான் இப்பொழுதும் அறிவேன்."