அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஆதம் (அலை) அவர்களின் சந்ததியினரில் முதன்மையானவனாகவும், பூமி பிளந்து முதன்முதலில் வெளிவருபவனாகவும், முதல் பரிந்துரைப்பவனாகவும், மேலும் முதன்முதலில் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுபவனாகவும் இருப்பேன்.
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் ஆதமுடைய மக்களின் தலைவர், இது பெருமையடிப்பதற்காக அல்ல. மறுமை நாளில் பூமி பிளக்கப்பட்டு அதிலிருந்து வெளிவரும் முதல் நபர் நானாக இருப்பேன், இது பெருமையடிப்பதற்காக அல்ல. நான் தான் முதலில் பரிந்துரைப்பேன், என்னுடைய பரிந்துரைதான் முதலில் ஏற்றுக்கொள்ளப்படும், இது பெருமையடிப்பதற்காக அல்ல. மறுமை நாளில் புகழின் கொடி என் கையில் இருக்கும், இது பெருமையடிப்பதற்காக அல்ல.”