இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

552ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أنس رضي الله عنه قال‏:‏ ما سئل رسول الله صلى الله عليه وسلم على الإسلام شيئاً إلا أعطاه، ولقد جاءه رجل، فأعطاه غنماً بين جبلين فرجع إلى قومه فقال‏:‏ يا قوم أسلموا، فإن محمداً يعطى من لا يخشى الفقر، وإن كان الرجل ليسلم ما يريد إلا الدنيا، فما يلبث إلا يسيراً حتى يكون الإسلام أحب إليه من الدنيا وما عليها”‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“இஸ்லாத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும், அதை அவர்கள் கொடுக்காமல் இருந்ததில்லை. (ஒரு முறை) ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார்; அவருக்கு இரண்டு மலைகளுக்கு இடையே (நிறைந்திருந்த) ஆடுகளை அவர்கள் வழங்கினார்கள். அவர் தம் மக்களிடம் திரும்பிச் சென்று, ‘என் மக்களே! இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் வறுமையை அஞ்சாதவர் வழங்குவதைப் போன்று வாரி வழங்குகிறார்கள்’ என்று கூறினார். ஒரு மனிதர் உலகத்தை மட்டுமே நாடி இஸ்லாத்தை ஏற்பார். ஆனால், சிறிது காலத்திற்குள்ளாகவே இவ்வுலகம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் விட இஸ்லாம் அவருக்கு மிகப் பிரியமானதாக ஆகிவிடும்.”