حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، هُوَ الْجُرَشِيُّ الْيَمَامِيُّ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِيهِ، قَالَ لَقَدْ قُدْتُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَالْحَسَنَ وَالْحُسَيْنَ عَلَى بَغْلَتِهِ الشَّهْبَاءِ حَتَّى أَدْخَلْتُهُ حُجْرَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا قُدَّامُهُ وَهَذَا خَلْفُهُ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும், அல்-ஹஸன் (ரழி), அல்-ஹுஸைன் (ரழி) ஆகியோரையும் (அவர்கள் அமர்ந்திருந்த) நபியவர்களின் சாம்பல் நிறக் கோவேறு கழுதையை, நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் அவரை (நபியவர்களை) சேர்த்துவிடும் வரை வழிநடத்திச் சென்றேன். அப்போது இவர்களில் ஒருவர் (நபியவர்களுக்கு) முன்னாலும், மற்றொருவர் (நபியவர்களுக்கு) பின்னாலும் இருந்தார்கள்.