`அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்)` (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
எவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் வேதத்தில் எந்த சூரா அருளப்பட்டாலும் அது எந்த இடத்தில் அருளப்பட்டது என்பதை நான் அறிவேன்; மேலும் அல்லாஹ்வின் வேதத்தில் எந்த வசனம் அருளப்பட்டாலும் அது யாரைக் குறித்து அருளப்பட்டது என்பதை நான் அறிவேன். மேலும், அல்லாஹ்வின் வேதத்தை என்னை விட நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் ஒட்டகங்கள் சென்றடையக்கூடிய ஓரிடத்தில் இருக்கிறார் என்றும் நான் அறிந்தால், நான் அவரிடம் சென்றிருப்பேன்.