وعن أبى هريرة رضي الله عنه أن رجلاً قال: يا رسول الله إن لى قرابة أصلهم ويقطعونى، وأحسن إليهم ويسيئون إلى، وأحلم عنهم ويجهلون على! فقال: “لئن كنت كما قلت فكأنما تسفهم المل ولا يزال معك من الله تعالى ظهير عليهم ما دمت على ذلك” ((رواه مسلم)) وقد سبق شرحه في “باب صلة الأرحام”.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களுடன் நல்லுறவைப் பேணுகிறேன், ஆனால் அவர்கள் என்னுடன் உறவைத் துண்டிக்கிறார்கள்; நான் அவர்களிடம் கனிவாக நடந்துகொள்கிறேன், ஆனால் அவர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொள்கிறார்கள்; நான் அவர்களிடம் மென்மையாக இருக்கிறேன், ஆனால் அவர்கள் என்னிடம் கடினமாக நடந்துகொள்கிறார்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் சொல்வது போல் நீர் இருந்தால், அது நீர் அவர்களின் வாயில் சூடான சாம்பலைத் திணிப்பதைப் போன்றதாகும். மேலும், நீர் இவ்வாறு நடந்துகொள்ளும் காலமெல்லாம், அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடமிருந்து உமக்கு ஓர் உதவியாளர் இருந்துகொண்டே இருப்பார்" என்று பதிலளித்தார்கள்.