அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில், அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள்; தமக்கிடையே பகைமை பாராட்டும் இருவரைத் தவிர. (அவ்விருவரைப் பற்றி) 'இவ்விருவரும் சமரசம் செய்துகொள்ளும் வரை இவர்களைப் பிற்படுத்துங்கள்' என்று கூறப்படும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்: “திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. அப்போது, அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காத ஒவ்வொரு அடியாரும் மன்னிக்கப்படுகிறார்; தனக்கும் தன் சகோதரருக்கும் இடையில் பகைமை கொண்ட ஒருவரைத் தவிர! ‘இவ்விருவரும் சமாதானம் ஆகும் வரை இவர்களுக்கு அவகாசம் அளியுங்கள்’ எனக் கூறப்படும்.”