وعنه قالك قال رسول الله صلى الله عليه وسلم : "عن الله عزو جل يقول يوم القيامة: "يا ابن آدم مرضت فلم تعدني! قال: يا رب كيف أعودك وأنت رب العالمين؟! قال: أما علمت أن عبدي فلاناً مرض فلم تعده؟ أما علمت أنك لو عدته لوجدتني عنده؟ يا ابن آدم استطعمتك فلم تطعمني! قال: يا رب كيف أطعمك وأنت رب العالمين؟! قال: أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه، أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي؟ يا ابن آدم استسقيتك فلم تسقني! قال: يارب كيف أسقيك وأنت رب العالمين؟! قال: استسقاك عبدي فلان فلم تسقه! أما علمت أنك لو سقيته لوجدت ذلك عندي؟" ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் கூறுவான்: ‘ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன்; ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை.’
அவன் கூறுவான்: ‘என் இறைவா! நீ அகிலங்களின் இறைவனாக இருக்கும்போது நான் உன்னை எப்படி நலம் விசாரிக்க முடியும்?’
அதற்கு அல்லாஹ் கூறுவான்: ‘எனது அடியார்களில் இன்னார் நோயுற்றிருந்தார்; ஆனால் நீ அவரை நலம் விசாரிக்கச் செல்லவில்லை என்பது உனக்குத் தெரியாதா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால், அவரிடம் என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியாயா? (அதாவது, அதன் நற்கூலியை என்னிடம் பெற்றிருப்பாய்.)
ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன்; ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை.’
அவன் கூறுவான்: ‘என் இறைவா! நீ அகிலங்களின் இறைவனாக இருக்கும்போது நான் உனக்கு எப்படி உணவளிக்க முடியும்?’
அல்லாஹ் கூறுவான்: ‘எனது அடியார்களில் இன்னார் உன்னிடம் உணவு கேட்டார்; ஆனால் நீ அவருக்கு உணவளிக்கவில்லை என்பது உனக்குத் தெரியாதா? நீ அவருக்கு உணவளித்திருந்தால், அதை என்னிடம் கண்டிருப்பாய் என்பதை நீ அறியாயா? (அதாவது, அதன் நற்கூலியை என்னிடம் பெற்றிருப்பாய்.)
ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன்; ஆனால் நீ எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை.’
அவன் கூறுவான்: ‘என் இறைவா! நீ அகிலங்களின் இறைவனாக இருக்கும்போது நான் உனக்கு எப்படித் தண்ணீர் புகட்ட முடியும்?’
அதற்கு அல்லாஹ் கூறுவான்: ‘எனது அடியார்களில் இன்னார் உன்னிடம் தண்ணீர் கேட்டார்; ஆனால் நீ அவருக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. நீ அவருக்குத் தண்ணீர் கொடுத்திருந்தால், அதை என்னிடம் கண்டிருப்பாய் என்பதை நீ அறியாயா? (அதாவது, அதன் நற்கூலியை என்னிடம் பெற்றிருப்பாய்.)’”