ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஃமினுக்கு ஒரு முள் குத்துவதோ அல்லது அதை விடப் பெரிய (துன்பமோ) எது ஏற்பட்டாலும், அதன் மூலம் அல்லாஹ் அவருடைய தரத்தை உயர்த்தி, அவருடைய பாவத்தை அவரிடமிருந்து நீக்கிவிடுகிறான்."