ஹிஷாம் பின் உர்வா அவர்கள் வழியாகவே இந்த ஹதீஸ் இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அபூமுஆவியா (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே உள்ளது. எனினும் அதில், 'அவளது முடி உதிர்ந்துவிட்டது' என்று இடம்பெற்றுள்ளது.
ஹிஷாம் அவர்கள் வாயிலாக இதே அறிவிப்பாளர் தொடரில் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விருவரின் ஹதீஸிலும் ‘அவள் அதைக் கட்டிப் போட்டாள்’ என்றும், அபூமுஆவியா (ரஹ்) அவர்களின் ஹதீஸில் ‘பூச்சிகள்’ என்றும் இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட அறிவிப்பாளர் தொடர் வழியாகவே ஹிஷாம் அவர்களிடமிருந்து இவர்கள் அனைவரும் அறிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மற்றவரைவிட (சில சொற்களை) அதிகப்படுத்துகின்றனர்.
மேற்கண்ட அறிவிப்பாளர் தொடர் வழியாகவே இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு கூடுதலாக இடம்பெற்றுள்ளது:
“அந்நாளில் உமைர் பின் ஸஅத் (ரலி) பலஸ்தீனத்தின் ஆட்சியாளராக இருந்தார். அவரிடம் (ஹிஷாம்) சென்று (இந்த ஹதீஸை) அறிவித்தார். உடனே அவர்கள் விஷயத்தில் (அவர்களை விடுவிக்குமாறு) உமைர் உத்தரவிட, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.”