அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. ஒருவர் மன்னிப்பதால் (பிறரை) அல்லாஹ் அவருக்கு கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். மேலும், எவர் அல்லாஹ்வுக்காகப் பணிந்து நடக்கிறாரோ, அவரை அல்லாஹ் உயர்த்துகிறான்."
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ, وَمَا زَادَ اَللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا, وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ } أَخْرَجَهُ مُسْلِمٌ . [1] .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஸதகா செல்வத்தைக் குறைப்பதில்லை. அல்லாஹ் ஒரு அடியானுக்கு மன்னிப்பின் மூலம் கண்ணியத்தைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்துவதில்லை. மேலும், அல்லாஹ்வுக்காக யார் பணிந்து நடக்கிறாரோ, அல்லாஹ் அவரை (அந்தஸ்தில்) உயர்த்துகிறான்.” ஆதாரம்: முஸ்லிம்.
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: “ما نقصت صدقة من مال، وما زاد الله عبداً بعفو إلا عزاً، وما تواضع أحد لله إلا رفعه الله عز وجل” ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "தர்மம் செய்வதால் செல்வம் குறைவதில்லை (மாறாக, அல்லாஹ் அதில் அபிவிருத்தியை ஏற்படுத்துவான்). மன்னிப்பவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை அதிகரிக்கிறான் (இம்மையிலும் மறுமையிலும்); மேலும், அல்லாஹ்வின் திருப்தியை நாடி யார் பணிவுடன் நடக்கிறாரோ, அல்லாஹ் அவரை (இம்மையிலும் மறுமையிலும்) அந்தஸ்துகளில் உயர்த்துகிறான்."