அஃமஷ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் இந்த அறிவிப்பில், ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸில் ‘வ அஜ்ரன்’ (நற்கூலியாகவும்) என்றும், ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸில் ‘வ ரஹ்மதன்’ (அருளாகவும்) என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அஃமஷ் (ரஹ்) அவர்கள் வழியாக இந்த ஹதீஸ் இதே அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவர்கள் அனைவரின் ஹதீஸிலும், ''மரங்களை ஒரு விரலிலும், ஈர மண்ணை ஒரு விரலிலும்'' என்று இடம்பெற்றுள்ளது. ஜரீர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ''படைப்பினங்களை ஒரு விரலிலும்'' என்பது இடம்பெறவில்லை. மாறாக அவரது அறிவிப்பில், ''மலைகளை ஒரு விரலிலும்'' என்று இடம்பெற்றுள்ளது. மேலும் ஜரீர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ''(யூதர்) கூறியதை ஆச்சரியத்துடன் உண்மைப்படுத்தும் விதமாக'' என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.