இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு நுமைர் (தம் தந்தை மற்றும் வக்கீஃ வழியாகவும்), இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ஈஸா பின் யூனுஸ் வழியாகவும்) ஆகியோர் அஃமஷ் வழியாக, இதே அறிவிப்பாளர் தொடரில் (முன்னர் உள்ளதைப்) போன்றே அறிவித்துள்ளனர்.
இந்த ஹதீஸ் அஃமஷ் (ரஹ்) அவர்கள் வழியாக இதே அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜரீர் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே உள்ளது. ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், "(அவர்கள் இருவரும்) அவருடன் தனிமையில் சந்தித்தனர்; அப்போது அவர் அவ்விருவரையும் ஏசினார்; சபித்தார்; மேலும் அவ்விருவரையும் வெளியேற்றினார்" என்று இடம்பெற்றுள்ளது.
அஃமஷ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் இந்த அறிவிப்பில், ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸில் ‘வ அஜ்ரன்’ (நற்கூலியாகவும்) என்றும், ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸில் ‘வ ரஹ்மதன்’ (அருளாகவும்) என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. எனினும் இப்னு உலய்யா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், இப்னு இத்ரீஸ் (ரஹ்) கூறியதைப் போன்று ‘திராட்சை’ என்றும்; ஈஸா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், இப்னு முஸ்ஹிர் (ரஹ்) கூறியதைப் போன்று ‘உலர்ந்த திராட்சை’ என்றும் இடம்பெற்றுள்ளது.