நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரும் தனது சகோதரரை நோக்கி ஆயுதத்தால் சுட்டிக்காட்ட வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் அவரது கையை (திடீரென) இழுத்துவிடக்கூடும் (அல்லது தவறாகச் செயல்படச் செய்யக்கூடும்) என்பதை அவர் அறியமாட்டார். (அவ்வாறு நடந்தால், அந்த ஆயுதம் தவறிச் சென்று) அவர் நரக நெருப்புக் குழியில் விழுந்துவிடுவார்."