وعن عائشة رضي الله عنها قالت: جاءتني مسكينة تحمل ابنتين لها، فأطعمتها ثلاث تمرات، فأعطت كل واحدة منهما تمرة ورفعت إلى فيها تمرة لتأكلها ، فاستطعمتها ابنتاها، فشقت التمرة التي كانت تريد أن تأكلها بينهما، فأعجبني شأنها، فذكرت الذي صنعت لرسول الله صلى الله عليه وسلم فقال: إن الله قد أوجب لها بها الجنة، أو أعتقها بها من النار ((رواه مسلم)).
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஒரு ஏழைப் பெண் தனது இரண்டு மகள்களைச் சுமந்துகொண்டு என்னிடம் வந்தாள். நான் அவளுக்கு மூன்று பேரீச்சம்பழங்களைக் கொடுத்தேன். அவள் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பேரீச்சம்பழத்தைக் கொடுத்தாள். பிறகு மீதமிருந்த ஒரு பேரீச்சம்பழத்தைத் தான் சாப்பிட வாயருகே கொண்டு சென்றாள். ஆனால் அவளுடைய மகள்கள் அதையும் கேட்டார்கள். எனவே, அவள் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம்பழத்தையும் இருவருக்கும் பிளந்து கொடுத்தாள். அவளின் இச்செயல் என்னைக் கவர்ந்தது. நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், 'நிச்சயமாக, அல்லாஹ் அவளுக்கு இதன் காரணமாக சுவர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான்,' அல்லது 'இதன் காரணமாக அவளை நரக நெருப்பிலிருந்து விடுவித்துவிட்டான்' என்று கூறினார்கள்."