இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6171ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم مَتَّى السَّاعَةُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ مَا أَعْدَدْتَ لَهَا ‏"‏‏.‏ قَالَ مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرِ صَلاَةٍ وَلاَ صَوْمٍ وَلاَ صَدَقَةٍ، وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ‏.‏ قَالَ ‏"‏ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது ஏற்படும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அதற்காக நீர் என்ன தயார் செய்து வைத்துள்ளீர்?" என்று கூறினார்கள். அந்த மனிதர், "நான் அதற்காக அதிகமான தொழுகைகளையோ, நோன்புகளையோ, தர்மங்களையோ தயார் செய்யவில்லை, ஆனால் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீர் யாரை நேசிக்கிறீரோ, அவர்களுடன் இருப்பீர்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
7153ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم خَارِجَانِ مِنَ الْمَسْجِدِ فَلَقِيَنَا رَجُلٌ عِنْدَ سُدَّةِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ مَا أَعْدَدْتَ لَهَا ‏"‏ فَكَأَنَّ الرَّجُلَ اسْتَكَانَ ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ صِيَامٍ وَلاَ صَلاَةٍ وَلاَ صَدَقَةٍ، وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ‏.‏ قَالَ ‏"‏ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நானும் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, பள்ளிவாசலின் வாசலருகே ஒரு மனிதர் எங்களைச் சந்தித்தார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! (மறுமை) நேரம் எப்போது வரும்?" என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம், "அதற்காக நீர் என்ன தயார் செய்து வைத்துள்ளீர்?" என்று கேட்டார்கள். அம்மனிதர் (தனது நற்செயல்கள் போதாதென உணர்ந்து) பணிந்து போனார். பிறகு அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் அதற்காக அதிகமான நோன்பையோ, தொழுகையையோ அல்லது தர்மத்தையோ தயார் செய்யவில்லை; ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்" என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீர் யாரை நேசிக்கிறீரோ அவருடன் இருப்பீர்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح