குரைஷி இணைவைப்பாளர்கள் அல்-கத்ர் குறித்து வாதிட்டுக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது: "அவர்கள் தங்கள் முகங்களால் நரக நெருப்பில் இழுத்துச் செல்லப்படும் நாளில் (அவர்களிடம் கூறப்படும்): “நரகத்தின் தீண்டலைச் சுவையுங்கள்.” நிச்சயமாக நாம் அனைத்துப் பொருட்களையும் கத்ருடன் படைத்துள்ளோம்."
குறைஷி இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கத்ர் (விதி) குறித்து தர்க்கம் செய்ய வந்தார்கள், ஆகவே பின்வரும் வசனங்கள் வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்பட்டன: அவர்கள் தங்கள் முகங்கள் குப்புற நரக நெருப்பில் இழுத்துச் செல்லப்படும் நாள். நரகத்தின் தீண்டலைச் சுவையுங்கள்! நிச்சயமாக, நாம் அனைத்துப் பொருட்களையும் கத்ருடன் (விதியுடனேயே) படைத்திருக்கிறோம் (54:48 & 49).
"இணைவைப்பாளர்களும் குரைஷிகளும் நபியவர்களிடம் (ஸல்) வந்து விதியைப் பற்றி தர்க்கம் செய்தார்கள். அப்போது பின்வரும் வசனம் அருளப்பட்டது: 'முகங்குப்புற நரகத்தில் அவர்கள் இழுக்கப்படும் நாளில் (அவர்களிடம் கூறப்படும்): "நரகத்தின் தீண்டுதலைச் சுவையுங்கள்!" நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் கத்ர் (விதி) கொண்டு படைத்தான்.'"