ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கள், “மக்கள் மறுமை நாளில் செம்மையும் வெண்மையும் கலந்த ஒரு நிலத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்; அது தூய்மையான மாவினால் செய்யப்பட்ட ஒரு சுத்தமான ரொட்டியைப் போன்று இருக்கும்” என்று கூறுவதை கேட்டேன்.
ஸஹ்ல் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: அந்த நிலத்தில் எவருக்கும் (பயன்படுத்திக் கொள்வதற்கான) எந்த அடையாளங்களும் இருக்காது.