'ஆயிஷா (ரழி) அவர்கள் இந்த ஆயத்தை ஓதினார்கள்: பூமி வேறொரு பூமியாக மாற்றப்படும் அந்நாளில் (14:48). அவர்கள் (ரழி) கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! (ஸல்) மக்கள் எங்கே இருப்பார்கள்?' அவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'ஸிராத்தின் மீது.''
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ قَوْلِهِ {يَوْمَ تُبَدَّلُ الأَرْضُ غَيْرَ الأَرْضِ وَالسَّمَوَاتُ } فَأَيْنَ تَكُونُ النَّاسُ يَوْمَئِذٍ قَالَ عَلَى الصِّرَاطِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “பூமி வேறு பூமியாகவும், அவ்வாறே வானங்களும் மாற்றப்படும் நாளில்.” 14:48 – அந்நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஸிராத் (நரகத்தின் மீதமைந்த பாலம்) மீது (இருப்பார்கள்)’ என்று கூறினார்கள்.”