அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சுவர்க்கமும் நரகமும் தர்க்கம் செய்தன. சுவர்க்கம் கூறியது: 'பலவீனர்களும் ஏழைகளும் எனக்குள் நுழைவார்கள்,' நரகம் கூறியது: 'கொடுங்கோலர்களும் பெருமையடிப்பவர்களும் எனக்குள் நுழைவார்கள்.' எனவே அவன் (அல்லாஹ்) நரகத்திடம் கூறினான்: 'நீ எனது தண்டனை, நான் நாடுபவர்களிடமிருந்து உன் மூலம் பழிவாங்குகிறேன்,' மேலும் அவன் (அல்லாஹ்) சுவர்க்கத்திடம் கூறினான்: 'நீ எனது கருணை, நான் நாடுபவர்களுக்கு உன் மூலம் கருணை காட்டுகிறேன்.'"
وعن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: احتجت الجنة والنار فقالت النار: في الجبارون والمتكبرون، وقالت الجنة: في ضعفاء الناس ومساكينهم، فقضى الله بينهما: إنك الجنة رحمتي أرحم بك من أشاء، وإنك النار أعذب بك من أشاء، ولكليكما علي ملؤها ((رواه مسلم)).
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. நரகம், "பெருமை அடிப்பவர்களும், ஆணவம் கொண்டவர்களும் என் வாசிகள்" என்றது. சொர்க்கம், "பணிவானவர்களும், தாழ்மையானவர்களும் என் வாசிகள்" என்றது. அப்போது, உயர்ந்தோனும், மகிமை மிக்கோனுமாகிய அல்லாஹ் (சொர்க்கத்தை நோக்கி) கூறினான்: "நீ என்னுடைய கருணை, உன்னைக் கொண்டு நான் நாடியவர்களுக்குக் கருணை காட்டுவேன்". (மேலும் நரகத்தை நோக்கி) அவன் கூறினான்: "நீ என்னுடைய தண்டனை(க்குரிய சாதனம்), உன்னைக் கொண்டு நான் நாடிய என் அடிமைகளை தண்டிப்பேன், உங்கள் ஒவ்வொன்றும் நிரப்பப்படும்".