இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1861ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي زيد عمرو بن أخطب الأنصاري رضي الله عنه قال‏:‏ صلى بنا رسول الله صلى الله عليه وسلم الفجر، وصعد المنبر، فخطبنا حتى حضرت الظهر، فنزل فصلى، ثم صعد المنبر حتى حضرت العصر، ثم نزل فصلى، ثم صعد المنبر حتى غربت الشمس، فأخبرنا ما كان هو كائن، فأعلمنا أحفظنا‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அபூ ஸைத் அம்ர் பின் அக்தப் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஃபஜ்ருத் தொழுகையை நடத்தினார்கள். பின்பு மிம்பரில் ஏறி, லுஹ்ருத் தொழுகை நேரம் வரும் வரை எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பிறகு (மிம்பரில் இருந்து) இறங்கித் தொழுதார்கள். பிறகு மிம்பரில் ஏறி, அஸர் தொழுகை நேரம் வரும் வரை (உரை நிகழ்த்தினார்கள்). பிறகு (மிம்பரில் இருந்து) இறங்கித் தொழுதார்கள். பிறகு மிம்பரில் ஏறி, சூரியன் மறையும் வரை (உரை நிகழ்த்தினார்கள்). நடந்து முடிந்தவற்றையும், இனி நடக்கவிருப்பவற்றையும் அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தார்கள். எங்களில் (அவற்றை) அதிகம் மனனம் செய்தவரே, எங்களில் அதிகம் அறிந்தவர் ஆவார்.