حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ ". قَالَ أَرْبَعُونَ يَوْمًا قَالَ أَبَيْتُ. قَالَ أَرْبَعُونَ شَهْرًا قَالَ أَبَيْتُ. قَالَ أَرْبَعُونَ سَنَةً قَالَ أَبَيْتُ. قَالَ " ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً. فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ لَيْسَ مِنَ الإِنْسَانِ شَىْءٌ إِلاَّ يَبْلَى إِلاَّ عَظْمًا وَاحِدًا وَهْوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ ".
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(ஸூர் எக்காளம்) இரண்டு முறை ஊதப்படுவதற்கு இடைப்பட்ட காலம் நாற்பதாகும்."
(அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் ஒருவர்) "நாற்பது நாட்களா?" என்று கேட்டார். (அதற்கு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்) "நான் (அதை உறுதிப்படுத்த) மறுக்கிறேன்" என்றார்கள். (அவர் மீண்டும்) "நாற்பது மாதங்களா?" என்று கேட்டார். (அதற்கு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்) "நான் மறுக்கிறேன்" என்றார்கள். (அவர் மீண்டும்) "நாற்பது வருடங்களா?" என்று கேட்டார். (அதற்கு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்) "நான் மறுக்கிறேன்" என்றார்கள்.
பிறகு (நபி (ஸல்) அவர்கள் மேலும்) கூறினார்கள்: "பின்னர் அல்லாஹ் வானத்திலிருந்து தண்ணீரை இறக்குவான். அப்போது கீரைகள் முளைப்பதைப் போன்று அவர்கள் (மனிதர்கள்) முளைப்பார்கள். மனிதனின் உடலில் ஒரேயொரு எலும்பைத் தவிர மற்ற அனைத்தும் அழிந்துவிடும். அது வால் எலும்பாகும். மறுமை நாளில் அதிலிருந்தே படைப்புகள் (மீண்டும்) உருவாக்கப்படும்."
وعنه عن النبي صلى الله عليه وسلم قال: " بين النفختين أربعون" قالوا: يا أبا هريرة أربعون يوماً؟ قال: أبيت، قالوا: أربعون سنة؟ قال: أبيت، قالوا: أربعون شهراً؟ قال: أبيت" ويبلى كل شئ من الإنسان إلا عجب ذنبه، فيه يركب الخلق، ثم ينزل الله من السماء ماء، فينبتون كما ينبت البقل" ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இரண்டு (சூர்) ஊதுதல்களுக்கு இடையில் நாற்பது (கால அளவு) இருக்கும்.’’ மக்கள், ‘‘அபூ ஹுரைராவே! நாற்பது நாட்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நான் (குறிப்பிட) மறுக்கிறேன்’’ என்றார்கள். அவர்கள், ‘‘நாற்பது வருடங்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நான் (குறிப்பிட) மறுக்கிறேன்’’ என்றார்கள். அவர்கள், ‘‘நாற்பது மாதங்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நான் (குறிப்பிட) மறுக்கிறேன்’’ என்றார்கள். (மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) ‘‘மனிதனின் வால் எலும்பின் நுனிப்பகுதியைத் தவிர அவனது மற்ற அனைத்தும் அழிந்துவிடும். அதிலிருந்துதான் படைப்புகள் (மீண்டும்) உருவாக்கப்படுகின்றன. பிறகு அல்லாஹ் வானத்திலிருந்து தண்ணீரை இறக்குவான். அப்போது பயிர்கள் முளைப்பதைப் போன்று அவர்கள் (மனிதர்கள்) முளைப்பார்கள்.’’
(புகாரி, முஸ்லிம்)