حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْمُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ، لاَ يُصِيبُكُمْ مَا أَصَابَهُمْ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(அல்லாஹ்வால்) வேதனை செய்யப்பட்ட இவர்களிடம் (அதாவது, ஸமூத் சமுதாயத்தினர் வாழ்ந்த இடங்களுக்கு) நீங்கள் அழுதவர்களாக அன்றி நுழையாதீர்கள். நீங்கள் அழவில்லையெனில், அவர்களிடம் நுழையாதீர்கள். அவர்களுக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேர்ந்துவிடக் கூடும்.”
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَصْحَابِ الْحِجْرِ لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْمُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) அல்ஹிஜ்ர் (பகுதியின்) வாசிகள் குறித்துக் கூறினார்கள்: “வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்களிடத்தில் (அதாவது, அவர்களின் வீடுகளில்) நீங்கள் அழுதவர்களாகவே தவிர நுழையாதீர்கள்; அவர்களுக்கு ஏற்பட்டது போன்றது உங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக.”
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأَصْحَابِ الْحِجْرِ لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْقَوْمِ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்-ஹிஜ்ர் (சாலிஹ் நபியின் சமூகத்தினர் வாழ்ந்த இடம்) வழியாகச் சென்றபோது (தம்) தோழர்களிடம் கூறினார்கள்: "இந்த (அழிந்துபோன) மக்களிடம் நீங்கள் அழுதவர்களாகவே அன்றி நுழையாதீர்கள். நீங்கள் அழுபவர்களாக இல்லையென்றால் அவர்களிடம் நுழையாதீர்கள்; அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (வேதனை) உங்களையும் பீடித்துவிடாதபடிக்கு."