وعن أبي موسي رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إذا عطس أحدكم فحمد الله فشمتوه، فإن لم يحمد الله فلا تشمتوه ((رواه مسلم)).
அபூ மூஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்: "உங்களில் ஒருவர் தும்மி அல்லாஹ்வைப் புகழ்ந்தால், அவருக்கு நீங்கள் (யர்ஹமுகல்லாஹ் என்று கூறி) மறுமொழி கூறுங்கள். ஆனால் அவர் அல்லாஹ்வைப் புகழவில்லை என்றால், அவருக்கு நீங்கள் மறுமொழி கூறாதீர்கள்."