ஒரு மனிதர் வந்து உஸ்மான் (ரழி) அவர்களை முகத்திற்கு நேராகப் புகழ்ந்தார். அல்-மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரழி) அவர்கள் புழுதியை எடுத்து அவரது முகத்தில் எறிந்துவிட்டு, "புகழ்ந்து பேசுபவர்களை நீங்கள் கண்டால், அவர்களின் முகங்களில் மண்ணைத் தூவுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று சொன்னார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்களின் முன்னிலையில் ஒரு மனிதர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து கொண்டிருந்தார். அப்போது இப்னு உமர் (ரழி) அவர்கள் அவரது வாயை நோக்கி மண்ணை வீசத் தொடங்கினார்கள். மேலும் அவர்கள், "புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களின் முகங்களில் மண்ணை வீசுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று சொன்னார்கள்.