இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4715ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ فِي هَذِهِ الآيَةِ ‏{‏الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمِ الْوَسِيلَةَ‏}‏ قَالَ نَاسٌ مِنَ الْجِنِّ ‏{‏كَانُوا‏}‏ يُعْبَدُونَ فَأَسْلَمُوا‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
‘அவர்கள் யாரை அழைக்கிறார்களோ, அவர்களே தங்கள் இறைவனிடம் நெருக்கத்திற்கான வழியைத் தேடுகிறார்கள்....’ (அல்-குர்ஆன் 17:57) எனும் இந்த இறைவசனம் குறித்து (அவர்கள் கூறியதாவது):
“ஜின் இனத்தைச் சார்ந்த சிலர் (மனிதர்களால்) வணங்கப்பட்டு வந்தனர்; பின்னர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح