இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4882ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ سُورَةُ التَّوْبَةِ قَالَ التَّوْبَةُ هِيَ الْفَاضِحَةُ، مَا زَالَتْ تَنْزِلُ وَمِنْهُمْ وَمِنْهُمْ، حَتَّى ظَنُّوا أَنَّهَا لَمْ تُبْقِ أَحَدًا مِنْهُمْ إِلاَّ ذُكِرَ فِيهَا‏.‏ قَالَ قُلْتُ سُورَةُ الأَنْفَالِ‏.‏ قَالَ نَزَلَتْ فِي بَدْرٍ‏.‏ قَالَ قُلْتُ سُورَةُ الْحَشْرِ‏.‏ قَالَ نَزَلَتْ فِي بَنِي النَّضِيرِ‏.‏
ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சூரத்துத் தவ்பா பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "தவ்பா (என்பது) அல்-ஃபாளிஹா (அம்பலப்படுத்துவது) ஆகும். (நயவஞ்சகர்களைப் பற்றி) 'அவர்களில் சிலர் (இப்படியும் உள்ளனர்)... அவர்களில் சிலர் (அப்படியும் உள்ளனர்)...' என்று (வசனங்கள்) தொடர்ந்து அருளப்பட்டுக்கொண்டே இருந்தன. (அவர்கள்) தங்களில் எவரையும் அது குறிப்பிடாமல் விட்டுவைக்காது என்று (நயவஞ்சகர்கள்) எண்ணுமளவிற்கு (அது அமைந்தது)" என்று கூறினார்கள்.
நான், "சூரத்துல் அன்ஃபால் (பற்றி)?" என்று கேட்டேன். அவர்கள், "அது பத்ர் (போர்) குறித்து அருளப்பட்டது" என்று கூறினார்கள்.
நான், "சூரத்துல் ஹஷ்ர் (பற்றி)?" என்று கேட்டேன். அவர்கள், "அது பனூ நளீர் (குலத்தார்) குறித்து அருளப்பட்டது" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح