حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جَمِيعًا.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக (ஒரே பொதுவான இடத்தில், கண்ணியமான முறையில்) உளூச் செய்வார்கள்.'
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் (கணவன் - மனைவியர் அல்லது மஹ்ரமானவர்கள் ஒரே பாத்திரத்திலிருந்து) கூட்டாக உளூச் செய்து வந்தனர்.
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جَمِيعًا .
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் (ஒரே நீர் ஆதாரத்திலிருந்து அல்லது ஒரே பொதுவான இடத்தில், ஆனால் கண்ணியத்தைப் பேணி) ஒன்றாக உளூ செய்து வந்தார்கள்.'