இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1252ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ، مَوْلَى شَدَّادِ بْنِ الْهَادِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ سَمِعَ رَجُلاً يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ فَلْيَقُلْ لاَ رَدَّهَا اللَّهُ عَلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பள்ளிவாசலில் ஒருவர் காணாமற்போன தமது பொருள் குறித்து அறிவிப்புச் செய்வதை (தேடி அழைப்பதை) எவரேனும் கேட்டால், அவர், 'அல்லாஹ் அதனை உமக்குத் திருப்பிக் கொடுக்காதிருப்பானாக! ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை' என்று கூறட்டும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح