وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فِي ثَوْبٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ .
உமர் பின் அபீஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டில் ஒரே ஆடையை (உடலைச் சுற்றிக்கட்டி) அதன் இரு ஓரங்களையும் ஒன்றோடொன்று குறுக்காகப் போட்டு அணிந்தவர்களாகத் தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன்.
உமர் இப்னு அபூ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையால் (தம் உடலை) போர்த்தியவர்களாக, அதன் இரு முனைகளையும் மாற்றிப் போட்டவர்களாக தொழுவதை கண்டேன். ஈஸா இப்னு ஹம்மாத் அவர்கள், (அந்த ஆடையின் முனைகள்) 'தம் தோள்கள் மீது (இருந்தன)' என்று கூடுதலாகக் கூறினார்கள்.