இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

286ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ اشْتَكَى بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مَشَقَّةَ السُّجُودِ عَلَيْهِمْ إِذَا تَفَرَّجُوا فَقَالَ ‏ ‏ اسْتَعِينُوا بِالرُّكَبِ ‏ ‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ اللَّيْثِ عَنِ ابْنِ عَجْلاَنَ ‏.‏ وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ سُمَىٍّ عَنِ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا ‏.‏ وَكَأَنَّ رِوَايَةَ هَؤُلاَءِ أَصَحُّ مِنْ رِوَايَةِ اللَّيْثِ ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், தாங்கள் (ஸஜ்தாவில் கைகளை விலக்கி) விரித்து வைக்கும்போது தங்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முழங்கால்களின் மூலம் உதவி தேடுங்கள் (அதாவது, சிரமம் ஏற்படும்போது முழங்கால்களின் மீது முழங்கைகளை வைத்துச் சாய்ந்து கொள்ளுங்கள்)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)