அபூ தர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் (கண்ணியமும் மகத்துவமும் மிக்கவன்), அடியான் ஒருவன் தனது தொழுகையில் (வேறு பக்கம்) திரும்பாத வரை, அவனை முன்னோக்கியவாறே இருக்கிறான். அவன் தன் முகத்தைத் திருப்பினால், அல்லாஹ் அவனை விட்டும் திரும்பிவிடுகிறான்."