இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1184சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبْثَرٌ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ رَافِعُو أَيْدِينَا فِي الصَّلاَةِ فَقَالَ ‏ ‏ مَا بَالُهُمْ رَافِعِينَ أَيْدِيَهُمْ فِي الصَّلاَةِ كَأَنَّهَا أَذْنَابُ الْخَيْلِ الشُّمُسِ اسْكُنُوا فِي الصَّلاَةِ ‏ ‏ ‏.‏
ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்கள் தொழுகையில் எங்கள் கைகளை உயர்த்திக் கொண்டிருந்தோம். அவர்கள் கூறினார்கள்: 'இவர்களுக்கு என்ன நேர்ந்தது? தொழுகையில் தங்கள் கைகளை, மிரண்டோடும் குதிரைகளின் வால்களைப் போல (அடிக்கடி அசைத்து, கட்டுப்பாடின்றி) உயர்த்துகின்றனர்! தொழுகையில் அமைதியாக இருங்கள்.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)