أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ التَّحَلُّقِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلاَةِ وَعَنِ الشِّرَاءِ وَالْبَيْعِ فِي الْمَسْجِدِ .
அம்ர் பின் ஷுஐப் அவர்கள், தம் தந்தையிடமிருந்தும், தம் பாட்டனார் (அப்துல்லாஹ் பின் அம்ர் ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்தும் அறிவிக்கிறார்கள்: "நபி (ஸல்) அவர்கள், வெள்ளிக்கிழமையன்று (ஜும்ஆ) தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும், மஸ்ஜிதில் கொடுக்கல் வாங்கல் செய்வதையும் தடுத்தார்கள்."