இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا عَلِيُّ بْنُ حَمْشَاذٍ الْعَدْلُ، ثنا عُبَيْدُ بْنُ مُحَمَّدٍ الْحَافِظُ، ثنا مُحَمَّدُ بْنُ أَبِي صَفْوَانَ، ثنا حِرْمِيُّ بْنُ عُمَارَةَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ النَّضْرِ، حَدَّثَنِي أَبِي قَالَ: " كَانَتْ ظُلْمَةٌ عَلَى عَهْدِ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: فَأَتَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، فَقُلْتُ: يَا أَبَا حَمْزَةَ، هَلْ كَانَ يُصِيبكُمْ مِثْلُ هَذَا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ ﷺ؟ فَقَالَ: " مَعَاذَ اللهِ، إِنْ كَانَتِ الرِّيحُ لَتَشْتَدُّ فَنُبَادِرُ إِلَى الْمَسْجِدِ مَخَافَةَ الْقِيَامَةِ "
நள்ரு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் காலத்தில் (ஒருமுறை பகல் நேரத்தில்) கடும் இருள் சூழ்ந்தது. அப்போது நான் அனஸ் (ரழி) அவர்களிடம் சென்று, "அபூஹம்ஸாவே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களுக்கு இது போன்ற (கடும் இருள் போன்ற) நிலை ஏற்பட்டிருக்கிறதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மஆதல்லாஹ்! (அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்; அவ்வாறு நிகழ்ந்ததில்லை). பலத்த காற்று வீசினால் கூட, (அது இறைத்தண்டனையோ அல்லது) கியாமத் நாள் (நெருங்கிவிட்டதோ) என்ற அச்சத்தில் நாங்கள் உடனே பள்ளிவாசலை நோக்கி விரைவோம்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له