அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நபி (ஸல்) அவர்கள் (பயணத்தின்போது) ஓரிடத்தில் தங்க நேர்ந்தால், லுஹர் தொழுகையை நிறைவேற்றும் வரை அவர்கள் அங்கிருந்து புறப்பட மாட்டார்கள்."
ஒரு மனிதர், "நண்பகல் நேரமாக இருந்தாலும் கூடவா?" என்று கேட்டார்.
அதற்கு (அனஸ் ரழி அவர்கள்), "நண்பகல் நேரமாக இருந்தாலும் கூட (அவர்கள் லுஹர் தொழுதுவிட்டுத்தான் புறப்படுவார்கள்)" என்று கூறினார்கள்.