أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ امْرَأَةً، مِنْ أَهْلِ الْيَمَنِ أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَبِنْتٌ لَهَا فِي يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيِظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ " أَتُؤَدِّينَ زَكَاةَ هَذَا " . قَالَتْ لاَ . قَالَ " أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ " . قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ هُمَا لِلَّهِ وَلِرَسُولِهِ صلى الله عليه وسلم .
அம்ர் இப்னு ஷுஐப் அவர்கள், தனது தந்தை வழியாக, தனது பாட்டனாரிடமிருந்து அறிவித்ததாவது:
யமன் தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவளுடைய மகளின் கையில் இரண்டு தடிமனான தங்க வளையல்கள் இருந்தன. அவர்கள் (ஸல்), "இவற்றுக்கு நீங்கள் ஜகாத் கொடுக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "இல்லை" என்றார். அவர்கள் (ஸல்), "மறுமை நாளில் அல்லாஹ் உனக்கு நெருப்பாலான இரண்டு வளையல்களை அணிவித்தால் அது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா?" என்று கேட்டார்கள். உடனே அப்பெண் அந்த வளையல்களைக் கழற்றி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அளித்து, "இவை அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியவை" என்று கூறினார்.
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு பெண் தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அந்த மகளின் கையில் இரண்டு (தடிமனான) தங்க வளையல்கள் இருந்தன.
நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “இவற்றுக்கு நீங்கள் ஜகாத் கொடுக்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவள், ‘இல்லை’ என்றாள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் அல்லாஹ் இவ்விரண்டின் மூலம் நெருப்பால் ஆன இரண்டு வளையல்களை உங்களுக்கு அணிவிப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா?” என்று கேட்டார்கள்.
உடனே அவள் அவற்றை எறிந்துவிட்டாள்.
(இதனை அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ ஆகிய) மூன்று இமாம்களும் பதிவு செய்துள்ளனர். இதன் அறிவிப்பாளர் தொடர் வலுவானது.
அம்ர் பின் ஷுஐப் (ரஹ்) அவர்கள் தம் தந்தை வழியாகத் தம் பாட்டனார் (அப்துல்லாஹ் பின் அம்ர் - ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களுடன் அவருடைய மகளும் இருந்தார். அந்த மகளின் கைகளில் (தங்கம் அதிகமாகக் காணப்பட்ட) இரண்டு தடிமனான தங்க வளையல்கள் இருந்தன. அப்பெண்ணிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவற்றுக்கு நீ ஜகாத் கொடுக்கிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "இல்லை" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "(இதற்கான ஜகாத்தை நீ நிறைவேற்றாத காரணத்தால்) மறுமை நாளில் அல்லாஹ் உனக்கு நெருப்பாலான இரண்டு வளையல்களை அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சி தருமா?" என்று கேட்டார்கள். உடனே அப்பெண்மணி அவற்றைச் சட்டெனக் கழற்றி நபி (ஸல்) அவர்களிடம் (ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்காக) எறிந்துவிட்டு, "இவை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியவை (அதாவது தர்மமாகும்)" என்று கூறினார்.
இதை அம்ர் பின் ஷுஐப் அவர்கள் தம் தந்தை வழியாகத் தம் பாட்டனாரிடமிருந்து அறிவிப்பதில் தனித்து விளங்குகிறார்கள்.