இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

وَبِمَا أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ مُحَمَّدُ بْنُ بَكْرٍ، ثنا أَبُو دَاوُدَ، ثنا مُحَمَّدُ بْنُ سَوَّارٍ الْمِصْرِيُّ، ثنا عَبْدَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فِي الْمَرْأَةِ تَصَدَّقُ مِنْ بَيْتِ زَوْجِهَا، قَالَ: " لَا إِلَّا مِنْ قُوتِهَا، وَالْأَجْرُ بَيْنَهُمَا وَلَا يَحِلُّ لَهَا أَنْ تَصَدَّقَ مِنْ مَالِ زَوْجِهَا إِلَّا بِإِذْنِهِ " هَذَا قَوْلُ أَبِي هُرَيْرَةَ وَهُوَ أَحَدُ رُوَاةِ تِلْكَ الْأَخْبَارِ
அபூஹுரைரா (ரழி) அவர்கள், ஒரு பெண் தனது கணவனின் வீட்டிலிருந்து தர்மம் செய்வது குறித்துக் கூறினார்கள்:

"(அவ்வாறு தர்மம் செய்யக் கூடாது,) அவளுக்குரிய உணவிலிருந்து (அவள் தர்மம் செய்தால்) தவிர. (அப்போது) அதற்கான நற்கூலி இருவருக்கும் (பகிர்ந்து) கிடைக்கும். கணவனின் அனுமதியின்றி அவனுடைய செல்வத்திலிருந்து அவள் தர்மம் செய்வது (மார்க்க ரீதியாக) ஆகுமானதல்ல."

இது, இத்தகைய செய்திகளை அறிவிப்பவர்களில் ஒருவரான அபூஹுரைரா (ரழி) அவர்களின் கூற்றாகும்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له